top of page

பின்ச்சஸ் இனப்பறவைகள் வளர்க்கும் முறை

 

பின்ச்சஸ் அனைவராலும் விரும்பப்படும் ஒரு வகை அழகு பறவையாகும் . பறவை இனங்களில் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும் இனங்களில் இதையே முதலிடம் என கூறலாம் . பார்பதற்கு சிறிய அளவும் மிகவும் அழகாக தோன்றும் பறவை இதன் ஒலி ஒருவகை மன சந்தோஷத்தை அளிக்கும் பராமரிப்பும் எளிது இனப்பெருக்கம் அடைய செய்வது எளிது.

 

வளர்ப்புமுறை

 

* பின்ச்சஸ்சை சேர்வு செய்யும் பொழுது இளம்பருவமாக பார்த்து வாங்கி கொள்ளவும் ...

 

வளர்ப்புமுறை இருவகைப்படும்

 

01.கூட்டு வளர்ப்பு முறை (காலணி)(colony)

 

02.தனி சோடி வளர்ப்பு முறை (ஒற்றை)

 

01. கூட்டு வளர்ப்பு முறை 

 

அனைத்து பின்ச்சஸ் பறவைகளையும் ஒரே கூட்டில் வளர்க்கும் முறையாகும் பறவைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றால் போல் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம். இந்த முறை வீட்டில் அழகிற்காக வளப்போர் பின்பற்றுவார் .

 

02.தனி சோடி வளர்ப்பு 

 

ஒரு சோடி பின்ச்சஸ் பறவையை மட்டும் ஒரு கூட்டில் வளர்த்தல் இதற்கான இடம் கட்டாயமாக 1.5 அடி நீளம்* 1.5 அடி அகலம் 1 அடி உயரம் இருக்க வேண்டும் இந்த முறை இனப்பெருக்கத்திற்கு சிறந்த முறையாகும்

 

இந்த முறையை அதிகமாக வியாபார நோக்கோடு பண்ணுபவர்கள் பின்பற்றுவார்கள் ...

 

viber image 2019-04-16 , 13.53.26.jpg

பின்ச்சஸ் பறவைகளின் உணவுகள்

 

01.திணை(சாமை) கட்டாய உணவு

 

02.கனேரி

 

03.குரிரைமசால்செடி

 

04.அவித்த முட்டையை நன்றாக் நசித்து கொடுத்தல் (மாதம் இரு தடவை) முட்டை போடுவதற்கு 

 

05. வல்லாரை ,கீரை வகை 

 

06.கணவாய் ஒடு அல்லது முட்டை கோது (கட்டாயமாக எப்பொழுதும் கூட்டில் இருக்க வேண்டும் முட்டை இடும் குருவிகளின் கல்சிய ஊட்டச்சத்தை பெற)

 

bird_seed.jpg
sfw_dsc_0729_0.jpg

பின்ச்சஸ் பறவையின் ஊட்டச்சத்து மருந்துகள்

 

அனைத்து ஊட்டச்சத்து அடங்கிய பவுடர் அனைத்து மருந்தகங்களிலும் கிடைக்கும் மாதம் நான்கு தடவை நீரில் கலந்து கொடுக்க வேண்டும்.(படங்கள் கிழே)

 

பின்ச்சஸ் பராமரிப்பு

 

*கட்டாயமாக தினமும் புதிய நீர் அளிக்க வேண்டும்

 

*கூடு இருக்கும் இடம் அமைதியான ஆள்நடமாற்றம அதிகம் அற்ற இடமாக இருக்க வேண்டும் .

 

*வேறு பிராணிகளின் தொந்தரவு இல்லாது இருக்க வேண்டும் 

 

*அதிக கூடும் அதிக குளிரும் பாதிக்காவண்ணம் கூடு அமைக்க வேண்டும் 

 

*உணவுகளை கவனித்து அளிக்க வேண்டும்

 

*மாதம் ஒரு தடவையாவதி கூட்டை சுத்தப்படுத்வேண்டும்.

 

finch nest pic.jpg

இனப்பெருக்கம்

 

*பின்ச்சஸ் எளிதில் சோடி சேர்ந்து கொள்ளும்.
சோடி சேர்ந்த பின் அதுவாகவே கூடுகட்டி கொள்ளும் அதற்கு 
         01. தேங்காய் நார்(தென்னந்தூம்பு)
         02.காய்ந்த அறுகம் புல்

 

கூட்டிலே போட்டு விட வேண்டும். அவை கூடு கட்டுவதற்கு கூட்டின் உள்ளே 
   01. தேங்காய் சிரட்டை
   02. பிளாஸ்டி கப்
   03. மரப்பெட்டி
   04. மண் பானை(முட்டி)
   05. ஒலை கூடாரம்
   06. கம்பி வலை கூடு

 

இதில் ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும் தானாகவே இதில் தூம்பை கொண்டு இனச்செயர்கை அடைந்த மூன்று நாட்களில் கூட்டை கட்டி மூட்டை இட ஆரம்பிக்கும் 3 தொடக்கம் 9 முட்டைகள் வரை இடும்

 

முட்டையை ஆண் பெண் இரண்டுமே அடைகாக்கும் 

 

முட்டை இட்டு 14,15 நாட்களில் குஞ்சுகள் பொரித்து விடும் . 

 

குஞ்சு பெரித்து 14 நாட்களில் குஞ்சு கூட்டை விட்டு வெளியேறும். குஞ்சு வெளியேறி 20 நாட்களில் அவைகளை தாயிடம் இருந்து பிரிக்கலாம்.

 

பிரித்த பின் அவை மீண்டும் முட்டை இடும்

பின்ச்சஸ் குஞ்சுகள்  பொரித்து 3மாத்தின் பின் அவை இனச்செயற்கைக்கு தயாராகும்....

© 2019 by Name of Site. Proudly created with Wix.com

bottom of page