top of page

வாத்துகளின் வளர்ப்பு

 

 

முட்டையிடும்வாத்துகளின்பராமரிப்பு

 

வாத்துகள் பொதுவாக அதிகாலையிலேயே முட்டையிட்டுவிடும். சாதாரணமாக வாத்து முட்டையின் எடை 65-70கி இருக்கும். 5-6 மாத வயதில் முட்டையிடத் துவங்கும். முட்டையிடத் துவங்கிய 5-6 வாரங்களுக்குப் பிறகுதான் உற்பத்தி அதிகமாக (உச்ச நிலையில்) இருக்கும் குறைந்தது 14 மணிநேர சூரிய ஒளி கிடைக்கச் செய்தால் மட்டுமே நல்ல முட்டை உற்பத்தி இருக்கும். வாத்துகளுக்கு நாளொன்றுக்கு காலை 1 மாலை இரு வேளை தீவனம் அளித்தல் சிறந்தது. நன்கு அரைக்கப்பட்ட தீவனங்களையோ உருளை (குச்சித்) தீவனங்களையோ அளிக்கலாம். எனினும் அரைக்கப்பட்ட ஈரமான தீவனங்களே பெரிதும் உகந்தவை. தீவனமானது 18% புரதம், 2650 கிலோ கலோரி / கி.கி ME ஐப் பெற்றிருக்க வேண்டும். தீவனத் தொட்டி இடைவெளி வாத்து ஒன்றிற்கு 10 செ.மீ தீவிர வளர்ப்பு முறையில் தரை இடஅளவு ஒரு வாத்திற்கு 3710 - 4650 செ.மீ2 அளவு தேவைப்படும். ஆனால் இதுவே கூண்டு வளர்ப்பு முறையில் 1380 செ.மீ2 போதுமானது. மித தீவிர வளர்ப்பு முறையில் தரைஇடஅளவு 2790 செ.மீ2 அளவு இரவிலும் 929-1395 செ.மீ2 அளவு பகலில் உலர்த்தவும் தேவைப்படுகிறது. முட்டையிடும் வாத்துகளுக்கு முட்டைக் கூடுகள் அவசியம். 30 செ.மீ அகலம், 45 செ.மீ ஆழம் 30 செ.மீ உயரம் கொண்ட முட்டைக் கூடுகள் போதுமானவை. ஒரு கூடைப்பெட்டி 3 வாத்துகளுக்கு அளிக்கலாம்.

                   
ஒவ்வொரு 100 கி.கி தீவனக்கலவையுடன் விட்டமின் ஏ 600 விட்டமின் பி2 600 மி.கி மற்றும் நிக்கோட்டினிக் அமிலம் 5 கி. சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

 

வாத்துக் குஞ்சுகளின் பராமரிப்பு

 

வாத்துக்குஞ்சுகளை தீவிர அல்லது மித தீவிர முறைப்படி வளர்க்கலாம். தீவிர முறையில் தரை இட அளவு 91.5 அடி ஆழ் கூளத்திலும் 29.5 அடி கூண்டுகளிலும் 16 வார வயதுவரை தேவைப்படும். மித தீவிர முறையில் தரை இட அளவு 45.7 அடி ஒரு பறவைக்கு இரவிலும் திறந்த வெளியில் 30-45.7 அடியும் 16 வார வயது வரையிலும் அளிக்கப்பட வேண்டும். முதல் சில நாட்களுக்கு வெப்பக் கூட்டிற்குள் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரித்தல் அவசியம். பின்பு ஒவ்வொரு 2-3 நாட்களுக்கு ஒரு முறை 3 டிகிரி செல்சியஸ் அளவு குறைத்துக் கொள்ளலாம். வெயில் காலங்களில் வாத்துக் குஞ்சுகளை 8-10 நாட்கள் வரை வெப்பக்கூடுகளில் வைத்திருக்கலாம். அதுவே குளிர்காலங்கள் 2-3 வாரங்கள் வரை கூட வைத்திருக்கலாம்.

 

குஞ்சுகளின் பராமரிப்பு

 

வாத்துக்குஞ்சுகளுக்கு வெப்பமிளிக்க பேட்டரி புரூடர்களையும் பயன்படுத்தலாம். பல அடுக்கு பேட்டரி புரூடர்களும் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு அடுக்கு முறையே கையாள்வதற்கு எளிதானதாகும். வாத்துக் குஞ்சுகளுக்கு புரதம் 20%, 2750 கி. கலோரி / கி.கி வளர்சிதைமாற்ற எரிசக்தி உள்ள, நன்கு அரைக்கப்பட்ட தீவனம் 3 வார வயது வரையிலும், 18% புரதம், 2750 கி. கலோரி / கி.கி வளர்சிதைமாற்ற எரிசக்தி கொண்ட தீவனம் 4-8 வது வார வயதிலும் கொடுத்தல் வேண்டும். தீவனமும், அதை தயாரிக்கப் பயன் படுத்தப்படும் பொருட்களும் பூஞ்சான பாதிப்புகள் ஏதுமின்றி தூய்மையானதாக இருக்க வேண்டும்.

viber image 2019-04-16 , 11.08.27.jpg

© 2019 by Name of Site. Proudly created with Wix.com

bottom of page