கொக்ட்ரைல்cockatiel வளர்ப்பு முறை
கொக்ட்ரைல் இதன் பூர்விகம் அவுஸ்திரேலியா ஆகும் .
பார்ப்பதற்கு பட்ச்ஜீசின்(lovebird) அலகைபோல் அலகு கொண்டதும் கிளிபோன்ற உடலமைப்பும் தலையில் கொண்டை நீளமான் வால் என மிகவும் அழகான தோற்றம் கொண்ட மென்மையான பறவை ஆகும். இதன் ஒலி விசில் ஒலியை போன்றது .
கொக்ட்ரைலை தேர்வு செய்யும் பொழுது இளம்பருவமாக பார்த்து வாங்கி கொள்ளவும் அதாவது 6மாதங்களிற்கு உட்பட்ட பருவமாக இருக்க வேண்டும் . குஞ்சில் இருந்து வளர்தால் அவை முட்டை நன்றாக இடும் பருவம் வர 12-14 மாத காலங்கள் எடுக்கும்.
வளர்ப்புமுறை இருவகைப்படும்
01.கூட்டு வளர்ப்பு முறை (காலணி)(colony)
02.தனி சோடி வளர்ப்பு முறை (ஒற்றை)
01. கூட்டு வளர்ப்பு முறை
அனைத்து கொக்ட்ரைல் பறவைகளையும் ஒரே கூட்டில் வளர்க்கும் முறையாகும் பறவைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றால் போல் கூடுகளின் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம். அவை நன்கு பறந்து திரியும் அளவிற்கு இருந்தால் வேண்டும் . இந்த முறை இனப்பெருக்கத்திற்கு உகந்த நல்ல முறை இல்லை
02.தனி சோடி வளர்ப்பு
ஒரு சோடி கொக்ட்ரைல் பறவையை மட்டுமே ஒரு கூட்டில் வளர்த்தல் இதற்கான இடம் கட்டாயமாக 2.5 அடி நீளம்* 2 அடி அகலம் 1.5 அடி உயரம் இருக்க வேண்டும் இந்த முறை இனப்பெருக்கத்திற்கு சிறந்த முறையாகும்.
இது வியாபார நோக்கத்துக்கும் சிறந்த முறையாகும்.
இந்த முறையின் நன்மைகள்
01.குறிப்பிட்ட இனக்குஞ்சுகளை மட்டும் பெறலாம்.
02.இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும்.
03.நோய்தொற்று குறைவாக இருக்கும்.
04.உணவுச்சண்டை குறைவாக இருக்கும்.
05.பராமரிக்க பார்வை இட எளிது.
கொக்ட்ரைல் பறவைகளின் உணவுகள்
01.திணை(சாமை) கட்டாய உணவு
02.கனேரி
03.குரிரைமசால்செடி
04.அவித்த முட்டையை நன்றாக் நசித்து கொடுத்தல் (மாதம் இரு தடவை) முட்டை போடுவதற்கு
05. வல்லாரை ,கீரை வகை (விற்றமின்E)
06.கணவாய் ஒடு அல்லது முட்டை கோது (கட்டாயமாக எப்பொழுதும் கூட்டில் இருக்க வேண்டும் முட்டை இடும் குருவிகளின் கல்சிய ஊட்டச்சத்தை பெற)
07.நெல்
08.உறவைத்த பயறுவகை
09.சூரியகாந்தி விதை(குஞ்சு பொரிக்கும் காலங்களில் கொடுப்பது நல்லது)(அளவிற்கு அதிகம் கொடுத்தால் கொழுப்பால் முட்டை இடுவது குறைந்து விடும்)
10.கம்பு
11.பச்சை மக்கா சோளம்
12உறவைத்த கடலை வகை
13.கரட்,பீற்றூட் சீவிக்கொடுத்தல்
14.அசோலா
கொக்ட்ரைல் பறவையின் ஊட்டச்சத்து மருந்துகள்
அனைத்து ஊட்டச்சத்து அடங்கிய பவுடர் அனைத்து மருந்தகங்களிலும் கிடைக்கும் மாதம் நான்கு தடவை நீரில் கலந்து கொடுக்க வேண்டும். விற்றமின்E
(அனசோல்,விற்றாரெஸ்,அன்ரிரெஸ்)
கொக்ட்ரைல் பராமரிப்பு
*கட்டாயமாக தினமும் புதிய நீர் அளிக்க வேண்டும்
*கூடு இருக்கும் இடம் அமைதியான ஆள்நடமாற்றம அதிகம் அற்ற இடமாக இருக்க வேண்டும் .
*வேறு பிராணிகளின் தொந்தரவு இல்லாது இருக்க வேண்டும்
*அதிக கூடும் அதிக குளிரும் பாதிக்காவண்ணம் கூடு அமைக்க வேண்டும்
*உணவுகளை கவனித்து அளிக்க வேண்டும்
*மாதம் ஒரு தடவையாவதி கூட்டை சுத்தப்படுத்வேண்டும்.
*நோய்தாக்கம் ஏற்பட்டால் ஏற்ற பறவையை பிரித்து பராமரிக்க வேண்டும்.
*மாதம் நான்கு தடவை மஞ்சள் சோம்பை நீரில்
கலந்து கொடுத்தல் வேண்டும்
*கூட்டிகிற்கு வாரம் ஒரு தடவை மஞ்சள் வேப்பிலையை அவித்த நீரை தெளித்து விடுவது நல்லது நோய் தொற்றை குறைக்கும் ஏறும்பு பூச்சி வாராது.
*கூட்டின் அடிப்பக்கம் கழிவுகள் கிழே விழுவது போல் அமைப்பது நல்லது
இனப்பெருக்கம்
இவற்றை குஞ்சுகளில் இருந்து வளர்த்து வந்தால் 12-14மாதம் வரை காத்து இருக்க வேண்டும் . புதிதாக இளம் சோடிகளை வாங்கிவந்தால் அவை கூட்டை பழக நான்கு மாதங்கள் எடுக்கும் எப்படியும் 6மாத காலங்கள் ஆகும் இனப்பெருக்கம் செய்து முட்டை இட
பறவையை தேர்வு செய்யும் பொழுது
01.ஒரே தாயின் குஞ்சுகளாக இருக்க கூடாது
02.ஒரே வயது உடையதாக இருக்க வேண்டும்
சோடி சேர்க்கும் பொழுது 2சோடிகளை ஒரே கூட்டில் விட்டு முதலாவதாக சேரும் சோடியை வைத்து இருப்பது சிறந்த முறையாகும்
கூட்டினுல் மண்பானை/மரப்பெட்டி வைக்க வேண்டும் மரப்பெட்டியே சிறந்த தாகும் மரப்பெட்டியின் உள் மரத்தூள் போட்டு விடவேண்டும். மரப்பெட்டியை கூட்டின் வெளியே இருக்குமாறு வைப்பது நல்லது கண்காணிக்க இலகு என்பதால்
இனச்செயற்கை அடைந்த 5-8நாட்களில் முட்டை இட ஆரம்பிக்கும்2-6 முட்டைகள் வரை இடும் ஆண் பெண் இரண்டுமே அடைகாக்கும் .
18-22 நாட்களுக்குள் குஞ்சுகள் வெளிவரத்தொடங்கும் .குஞ்சு வெளிவந்து 30நாள் வரை ஆண் பெண் இரண்டுமே உணவுட்டும் 30 நாட்களின் பின் அவை பெட்டியை விட்டு வெளியேறும் வெளியேறி 15நாட்களில் அவைகளை கூட்டை விட்டு பிரிக்கலாம். பிரித்து 15 தினங்களில் அவை இனச்செயற்கைக்கு தயாராகும்.
இரண்டு தடவைக்கு மேல் ஒரு சோடி முட்டை இட்டு பொரிக்கவில்லை எனில் அந்த சோடியை மாற்றுவது நல்லது