சீக்கிரம்மரம்வளர்ப்பதுஎப்படி?
புதிதாய்நிலம்வாங்கிவீடுகட்டுபவர்கள்அனைவருக்கும்வீட்டைச்சுற்றிமரம்வளர்க்கஆசைதான்.
ஆனால்சிறியமரக்கன்றுகளைநட்டுஅதனைப்பராமரித்துவளர்க்கும்போதுஉள்ளசிரமங்கள்தான்மரம்வளர்க்கும்ஆசையையேபோக்கிவிடுகிறது.
ஆடுமாடுகள்மரக்கன்றுகளைகடிக்காமல்வேலிஅமைத்துப்பாதுகாக்கவேண்டும். ஆடுமாடுவராதஇடமாயிருந்தால்காற்றில்வளைந்துஒடிந்துவிடாமல்கம்புகளைநட்டுமரக்கன்றுகளைப்பாதுகாக்கவேண்டும்.
இப்படிப்பலவேலைகள்உள்ளதாலேயேபலருக்கும்மரம்வளர்ப்புமீதுஇனம்புரியாதவெறுப்புஏற்படுகிறது.
மரம்வெட்டிநடுதல்
இந்தக்கஷ்டம்எதுவும்இல்லாமல்விரைவில்மரம்வளர்க்கக்கூடியஎளிதானமுறைமரத்தைவெட்டிநடுதல்ஆகும்.
வீட்டின்முன்பும்வீட்டைச்சுற்றியும்பெரும்பாலும்வேப்பமரம்வளர்ப்பதையேஅதிகம்விரும்புவார்கள்.
வேப்பமரம்குளுமையானகாற்றைத்தருவதோடுமருத்துவகுணமும்உள்ளதால்எல்லோராலும்பெரிதும்விரும்பப்படுகிறது.
வெட்டிவைத்தால்நன்குவளரக்கூடியமரங்களுள்வேப்பமரம்முதன்மையானது.
மரம்நடும்காலம்
வேப்பமரம்எல்லாகாலங்களிலும்நன்குவளரும்மரம்என்றாலும்வெட்டிமரம்நடுவதற்குமிகவும்ஏற்றகாலம்மழைக்காலத்திற்குமுந்தையமாதமாகும்.
அதாவதுஜுலைஆகஸ்ட்மாதங்களில்வெட்டிநடுவதுசிறந்ததாகும். ஏனெனில்வெட்டிநட்டமரம்வேர்விடஆரம்பிக்கும்போதுசெப்டம்பர்அக்டோபர்மாதங்களில்மழைக்காலம்தொடங்குவதால்இதமானசூழ்நிலைநிலவும். இந்தச்சூழல்மரம்நன்குவளரஉதவும்.
விவசாயப்பகுதிகளிலும்தோட்டங்களிலும்வேப்பமரங்கள்தானாய்அதிகம்வளரும்மரமாகும்.
இம்மரங்களில்இரண்டுஆண்டுமுதல்ஐந்துஆண்டுவரையுள்ளமரங்களைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.
நேராகஒருகுறிப்பிட்டஉயரத்திற்குமேல்வளர்ந்துள்ளமரங்களைத்தேர்ந்தெடுக்கவேண்டும்.
மரங்களைஉடனடியாகவெட்டிஎடுக்காமல்முதலில்கிளைகளைவெட்டிவிடவேண்டும்.
பின்னர்மரத்தைச்சுற்றிகுழியைத்தோண்டிஆணிவேர்தவிரமற்றவேர்களைஅரிவாளால்வெட்டிவிட்டபின்மண்ணைத்தள்ளிமூடிவிடவேண்டும்.
ஒருவாரமோஅல்லதுஇரண்டுவாரமோகழித்துமீண்டும்மண்ணைத்தோண்டிஆணிவேரைவெட்டிஎடுத்துமரத்தைஉடனடியாகநடவேண்டும்.
ஏற்கெனவேவெட்டிவிட்டஇடங்களில்புதியவேர்கள்வளரஆரம்பித்திருக்கும். கிளைகளும்துளிர்விட்டிருக்கும்.
இதனால்மரங்கள்வைத்தஉடனேயேமுளைக்கஆரம்பித்துவிடும்.
மரம்நடும்இடத்தில்செய்யவேண்டியவை
மரம்நடும்இடத்தில்மூன்றுஅடிஆழக்குழியைஇரண்டுமூன்றுநாட்களுக்குமுன்புதோண்டிவைத்திருக்கவேண்டும்.
மரம்நடும்நாளில்குழிக்குள்முதலில்மாட்டுச்சாணம்போன்றஇயற்கைஉரங்களைப்போடவேண்டும்.
பின்னர்களிமண்அல்லதுசெம்மண்கொஞ்சம்போட்டுநன்குதண்ணீர்ஊற்றவேண்டும்.
அதன்பின்மரத்தைநட்டுகுழியைமண்போட்டுமூடவேண்டும். மூடியமண்ணைநன்குஇறுககாலால்மிதித்துவிடவேண்டும்.
மண்ணைநன்குஇறுகமிதிப்பதால்மரம்எந்தவிதத்திலும்ஆடாது. இப்படிநடும்மரங்களிலநூற்றுக்குத்தொண்ணூற்றுஒன்பதுசதவீதமரங்கள்முளைத்துவிடும்.
மரத்தின்விலை
மிகப்பெரியவேப்பமரத்தைவெட்டிநட்டால்கூடமுளைக்கும். ஆனால்உறுதியாய்ச்சொல்லமுடியாது.
இரண்டுமுதல்ஐந்துவருடவயதுள்ளவேப்பமரங்களைத்தேர்ந்தெடுத்துவெட்டிநடும்போதுஅம்மரங்கள்பட்டுப்போகாமல்நிச்சயம்வளரும்.
தோட்டங்களில்மொத்தமாகமரங்களைவாங்கமுடியும்.
வேப்பமரம்ஒன்று50 ரூபாய்முதல்200 ரூபாய்வரைகிடைக்கின்றன. வீட்டுவேலைஆரம்பிக்கும்போதுமரத்தைவெட்டிநட்டால்வேலைமுடிவதற்குள்மரங்கள்நிழல்தரும்அளவிற்குவளர்ந்துவிடும்.
தண்டுதடிமனானமரங்களைநடுவதால்ஆடுமாடுகடிக்கவோகாற்றில்முறிந்துவிழவோவாய்ப்பேஇல்லை.
கிராமங்களில்அதிகம்நடைமுறையில்உள்ளஇம்முறையைநகரங்களிலும்பயன்படுத்திஉடனடிப்பலன்பெறலாம்.🌳🌲🌱🌴