தர்பூசணி இப்பொழுது உலகின் பெரும்பாலான நாடுகளில் உற்பத்தியாகிறது. இந்தியா. இலங்கையில் தர்பூசணி உற்பத்தி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியது.
உடலில் உள்ள உஷ்ணத்தை போக்கி நீர்ச்சத்தை அதிகரிக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு. இப்பொழுதும் வெயிற் காலங்களில் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பயிரிடும் முறை:
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தர்பூசணி உற்பத்திக்கு சிறந்த காலங்கள் ஆகும்.நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் நிலம் தர்பூசணி சாகுபடிக்கு சிறந்த நிலமாகும்.
மண்ணின் கார அமில தன்மை 6 .5 முதல் 7 .5 வரை இருந்தால் அந்த மண்ணில் நல்ல உற்பத்தி கிடைக்கும்.
பயிரிடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தை நன்கு உழுது சமன்படுத்த வேண்டும். அதில் நான்கு அடி இடைவெளிகளில் 1 × 1 × 1 என்ற குழிகளை எடுக்க வேண்டும்.அக்குழிகளில் ஒவ்வொரு குழிக்கும் 1 கிலோ ஆட்டு உரம், அல்லது மாட்டெரு 1 கிலோ போட்டு மேல் மண்ணை கிளறி விட்டு குழியை மூட வேண்டும்.
பத்து நாட்கள் வரை ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.இவ்வாறு தயார் செய்யப்பட்ட குழிகளில் பத்து நாட்கள் கழித்து தேர்வு செய்யப்பட்ட விதைகளை குழிக்கு நான்கு விதைகள் வீதம் நட வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 500 கிராம் விதைகளை பயன்படுத்தலாம்.
பின்பு 1 வாரம் கழித்து நட்ட நான்கு விதைகளில் நன்றாக வளர்ந்த இரண்டு செடிகளை விட்டு விட்டு மீதி செடிகளை நீக்கி விட வேண்டும்.
வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
இரண்டு வாரம் கழித்து அதிலுள்ள தேவையற்ற களைகளை நீக்க வேண்டும்.
பின்பு கலைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவற்றை நீக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு சராசரியாக 15 டன் பழங்களை அறுவடை செய்யலாம்.
தர்பூசணியின் பயன்கள்:
கோடை காலத்தில் வெயிலுக்கு இதமாக உடல் சூட்டை குறைக்கும் பழங்களில் தர்பூசணி முதன்மையானது.
வைட்டமின்,தாதுக்கள்,கார்போஹைட்ரெட், இரும்பு சத்துக்கள் தர்பூசணியில் நிறைந்து காணப்படுகிறது.
கண் குளிர்ச்சிக்கு தர்பூசணி சிறந்த மருந்தாகும்.ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் பொட்டாசியத்தின் அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
நீரிழிவு நோய், இதயநோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.