கின்னிக்கோழி வளர்ப்பு பண்ணையில் நன்மை
பெரிதும் நகர்ந்து செல்லக்கூடிய பறவைகள்
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றது
காதம்பரி, சிதம்பரி மற்றும் ஸ்வேதாம்பரி என்ற 3 இரகங்கள் உள்ளன.
சிறப்பு குணங்கள்
கடினமாக பறவை
அனைத்து வேளாண்கால நிலைக்கும் ஏற்றது
குஞ்சுகளைத் தாக்கக்கூடிய அனைத்து வகை நோய்களுக்கும் எதிர்ப்புத் திறன் கொண்டவை
பெரிய செலவிலான பண்ணைக்கு அவசியமில்லை. நன்குமேயும் திறன் கொண்டவை
கோழித் தீவனத்திற்கு பயன்படாத அனைத்து வகையான தீவனங்களையும் கினிகோழிக்குப் பயன்படுத்தலாம்
பூசணம் மற்றும் அப்லோடாக்சின் நச்சை தாங்கவல்லது
கடினமான முட்டை ஓடு, முட்டை உடைவதைக் குறைப்பதோடு, நீண்ட நாள் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது
இறைச்சியில் அதிக அளவு வைட்டமின் சத்தும், குறைவான கொழுப்புச் சத்தும் உள்ளது.
உற்பத்தி பண்புகள்
8 வாரத்தில் எடை : 500 - 500 கிராம்
12 வாரத்தில் எடை : 900 - 1000 கிராம்
முதல் முட்டையிடும் வயது : 230 - 250 நாட்கள்
சராசரிஎடை : 38 - 40 கிராம்
முட்டை உற்பத்தி (ஒரு சுழற்சி மார்ச் - செப்டம்பர்) 100 - 120 முட்டைகள்
கருவுற்றல் 70 - 75%
கருவுற்ற முட்டைகளின் பொரிப்புத் திறன் 70 - 80%
கௌதாரிகளுடன் தொடர்புடையது ஆகும்.
இவை 25-30 முட்டைகளை இடுகின்றன. இவற்றின் முட்டைகள் சிறிய, கருப்பான மற்றும் மிகவும் தடித்த ஒடுடையவையாக உள்ளன. பெண் கோழிகளுக்குத் தங்கள் கூட்டை மறைத்து வைக்கும் ஒரு பழக்கம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவு முட்டைகள் வரும்வரை மற்ற கோழிகளுடன் அதைப் பகிர்ந்து கொள்ளும். அடைகாக்கும் காலம் 26-28 நாட்கள் ஆகும். குஞ்சுகளுக்கு ஈரம் ஒத்துக்கொள்வதில்லை.
ஏனெனில் இவை ஆப்பிரிக்காவின் வறண்ட பகுதிகளிலிருந்து வந்தவை ஆகும். ஈரமான புற்களின் வழியே தாயைப் பின்தொடர்வதன் மூலம் குஞ்சுகள் இறந்துவிடலாம். முதல் இரண்டு முதல் ஆறு வார வளர்ச்சிக்குப் பிறகு, வளர்ப்புக் கோழிகளிலேயே ஒரு கடினமான வகையாக இவை உருவாகின்றன.
கின்னிக்கோழிகளில் ஆண் பெண் வேறுபாடு அறிவது சேவல்களிலிருந்து பெண் கோழிகளை வேறுபடுத்துவதுபோல் அவ்வளவு எளிதல்ல.
இவை பெரியவையாக வளரும்போது, ஆண்களின் தலைக்கவசம் மற்றும் தாடி போன்ற சதையானது பெண்களைக் காட்டிலும் பெரியவையாக உள்ளன. பெண் மட்டுமே இரண்டு வகைச் சத்தமான "பக்-விட்" அல்லது "பொட்-ரக்!" ஐ எழுப்புகின்றன. இதைத் தவிர ஆண் பெண் இரண்டும் பெரும்பாலும் தோற்றத்தில் ஒன்றாகவே உள்ளன.
வளர்ப்புக் கோழியாக இவை பல பூச்சிகளை உண்பதன் மூலம் மதிப்புமிக்க பூச்சி கட்டுப்படுத்திகளாக உள்ளன. இவை லைம் நோயை ஏற்படுத்தும் உண்ணிகளையும் மற்றும் குளவிகளையும் உண்கின்றன. இவை அரிதாகவே அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன.
எனினும் இவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மற்ற கோழிகளுடன் வளர்க்கப்படும்போது கொன்றுண்ணிப் பறவைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஊடுருவல்கள் ஏற்படும்போது இவை இவற்றின் உரத்த குரலில் அழைக்கின்றன. இவை மிகவும் சமூகமாக இருக்கும் பறவைகள் ஆகும். தனியாக இருக்கும் போது இவை வாடத்தொடங்கி விடுகின்றன.
வளர்க்கப்படும் இனங்களில் தலைக்கவசக் கின்னிக்கோழியின் "முத்து" அல்லது இயற்கையான வண்ணம் தவிர பல வண்ண வேறுபாடுகள் உடைய கின்னிக்கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளன. வெள்ளை, ஊதா, கரும்பலகை நிறம், சாக்கலேட், வெளிர் ஊதா, பவள நீலம், வெண்கலம், காரீயம், பப் டுன்ட்டோட், பொன்னிறம் மற்றும் பல்வேறு வண்ணங்கள் ஆகியவை இதில் அடங்கும்.