top of page

கறவைமாடுகளின் பராமரிப்பு
🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄

 

அதிக பால் உற்பத்தி மூலம் நல்ல இலாபம் பெற கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாளலாம்.
கறவை மாடுகளு்குத் தீவனம் மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனமும் உட்கொள்ளுமளவு உலர் தீவனம் அல்லது வைக்கோல் அளிக்கலாம்

 

கறவை மாட்டின் தீவனம் குறைந்தால் உடனே பால் அளவு குறையும். எனவே 2.5 லிடடருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2 லிட்டருக்கும் 1 கிலோ கலப்புத் தீவனம் கடடாயம் அளிக்க வேண்டும்

கறவை மாடுகளை மென்னையாகக் கையாளுதல் வேண்டும். அவை பயந்தால் பால் உற்பத்தி குறையும்

கன்று ஈண்ட 16வது நாளிலேயே அதன் சூடு வெளிப்படும். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கேற்றவாறு பராமரிக்க வேண்டும். கரு அழிந்தால் இவ்வாறு நேரலாம். சரியான நேரம் பார்த்து அடுத்த கருத்தரிப்புக்குத் தயார் செய்தல் வேண்டும்

 

 

பால் உற்பத்தி அளவை ஒவ்வொருமுறையும் பதிவேடுகளில் பதிவு செய்தால் அதன் உற்பத்தி திறனை அறிந்துகொள்ள உதவும்

 

ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் தனித்தனிப் பதிவேடுகள் அவசியம்

கலப்பு தீவனத்தை பால் கறக்கும் முன்பும் அடர் தீவனத்தை பால் கறந்த பின் அளித்தல் சிறந்தது
ஒரு சீரான இடைவெளியுடன் தண்ணீர் வழங்க வேண்டும். வைக்கோல் போன்ற உல் தீவனங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கும்

 

viber image 2019-04-16 , 16.10.20.jpg

தினசரி பால் கறப்பது அவசியம் ஆகும். ஒரு நாளைக்கு 3 முறை கறப்பது பால் உற்பத்தியை அதிகரிக்கும். கறக்காமல் மடியிலேயே விடப்படும் பால் அதிக பால் சுரப்பதைக் குறைக்கிறது

முடிந்தவரை முழு கையையும் பயன்படுத்திப் பால் கறக்க வேண்டும். இதண்டு விரல் (பெரு விரல் அல்லது ஆட்காட்டி கொண்டு கறப்பது சீராக இல்லாமல் காம்புகளில் அதிக அழுத்தம் கொடுக்கும். இதனால் காம்பில் வலி உண்டாகிறது.

 

கன்று ஊட்டாமலேயே பசு பால் (சுரக்குமாறு) கறக்குமாறு பழக்க வேண்டும். அப்போதுதான் கன்றைப் பசுவிடமிருந்து விரைவில் பிரிக்க முடியும்

 

திறந்த வெளிக் கொட்டில் அமைப்பே கறவை மாடுகள் சுதந்திரமாக உணர வைக்கும்
Grooming of cows: எருமை மாடுகளை பால் கறக்குமுன் நன்கு கழுவினால் சுத்தமான பால் கிடைக்கும். தினசரி எருமை மற்றும் மாடுகளை குளிப்பாட்டுதல் உதிர்ந்த முடியை நீக்க உதவும்
ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அதை அறிந்து நீக்குதல் வேண்டும். உதாரணமாக அடிக்கடி உதைத்தல், நக்குதல் போன்றவை இருப்பின் அதன் காரணமாகச் சரிசெய்ய வேண்டும்
ஒவ்வொரு கறவைப் பருவத்திற்கும் இடையே 60-90 நாட்கள் இடைவெளி வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பால் தரும் நாட்கள் குறையும்

 

சரியான நேரத்தில் தடுப்பூசிகள் போடப்படவேண்டும்

ஒவ்வொரு கறவை மாட்டிற்கும் அடையாள எண் இட்டு அதன் பால் அளவு கொழுப்புச்சத்து அளவு உணவு உட்கொண்ட அளவு கன்று ஈனும் பருவங்கள் பதிவு செய்யப்படவேண்டும்

<இயற்கையின் காவலன், ijarkai , ijarkai.com ,இயற்கை

© 2019 by Name of Site. Proudly created with Wix.com

bottom of page